/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்
/
துாய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : டிச 27, 2025 06:37 AM

அவிநாசி: அவிநாசி நகராட்சியில் அலுவலகத்தில், துாய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கவுன்சில் தேசிய தலைவர் சாம்பிரகாஷ், பணியாளர்களுக்கான சலுகைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜுனன் துாய்மை பணியாளர்களுக்கான கடன் உதவி குறித்து பேசினார். அவிநாசி துணை தாசில்தார் கவுரி, சுகாதார ஆய்வாளர் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, நல வாரிய அட்டை, மெடிக்கல் கிட் ஆகியவற்றை நல வாரிய தலைவர் ஆறுச்சாமி வழங்கினார்.

