ADDED : டிச 27, 2025 06:36 AM
n ஆன்மிகம் n
மண்டல பூஜை
66ம் ஆண்டு மண்டல பூஜை, ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மகா கணபதி ஹோமம் - அதிகாலை 5:00 மணி. களபாபிேஷகம் - காலை, 10:00 மணி. புஷ்பாலங்காரம், மகா தீபாராதனை - மாலை, 6:30 மணி.
மார்கழி பாராயணம்
திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஈஸ்வரன் கோவில், திருப்பாவை - பெருமாள் கோவில், திருப்பூர். அதிகாலை, 5:00 மணி.
மார்கழி மஹோத்சவம்
'விஸ்வேஸ்வரரும் வீர ராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025', ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். நாலாயிர திவ்விய பிரபந்தம், கர்நாடக இன்னிசை, மாலை, 5:30 மணி.
n சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் ஸ்ரீ வைகுண்ட மார்கழி மஹோத்சவம் 2025, ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். பரதநாட்டியம். மாலை, 5:00 மணி முதல்.
மார்கழி வழிபாடு
ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என்.ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி - அதிகாலை, 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி - 6:15 மணி. வேத பாராயணம் - 6:30 மணி.
பாகவத உபன்யாசம்
ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். வழங்குபவர்: ஸங்கரஷண கவுரதாஸ். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.
அன்னதான விழா
30ம் ஆண்டு அன்னதான விழா, பாரப்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், மகர ஜோதி பக்தர்கள் குழு. ஸ்ரீ அய்யப்பன் மகா கன்னிசாமி பூஜை, கலா பூஜை, பஜனை மற்றும் தீபாராதனை. மாலை, 6:00 மணி.
பயிற்சி முகாம்
சிவாலய சைவாகம பூஜாக்ரம பயிற்சி முகாம், ஸ்ரீ வாகீசர் மடாலயம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: பெங்களூரு ஸ்ரீஸ்ரீ வேத ஆகம ஆய்வு நிறுவனம். சிறப்புரைகள், நிறைவு விழா. காலை, 10:00 மணி.
சொற்பொழிவு
கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை.
பொங்கல் விழா
ஸ்ரீ செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. அபிேஷக ஆராதனை பூஜைகள். இரவு, 8:00 மணி.
n பொது n
முப்பெரும் விழா
'கிட்கோ' நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் வர்த்தக கண்காட்சி, ஸ்ரீ வேலாயுதசுவாமி திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கொங்கு வர்த்தக கூட்டமைப்பு, திருப்பூர். காலை 9:30 மணி. கலை நிகழ்ச்சிகள் - மாலை, 6:00 மணி முதல்.
மருத்துவ முகாம்
நலம் காக்கும் ஸ்டாலின் பலதுறை உயர் சிறப்பு மருத்துவ முகாம். அரசு மேல்நிலைப்பள்ளி, சேவூர். காலை, 9:00 மணி முதல் மாலை 4:00, மணி வரை.
தேசிய கருத்தரங்கம்
பேஷ்கான் - 2026, பேஷன் தொழில்முனைவோருக்கான தேசிய கருத்தரங்கம். நிப்ட்-டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.

