/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81.29 லட்சத்தில் நல உதவி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81.29 லட்சத்தில் நல உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81.29 லட்சத்தில் நல உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81.29 லட்சத்தில் நல உதவி
ADDED : மார் 29, 2025 11:50 PM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 87 மாற்றுத்திறனாளிகளுக்கு, 81.29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய 'டூ வீலர்' இலவசமாக வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
அமைச்சர் சாமிநாதன், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 72 மாற்றுத்திறனாளிகளுக்கு, 78.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இணைப்பு சக்கரம் பொருத்திய டூவீலர், இருவருக்கு, 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி வீல் சேர், ஐந்து பேருக்கு, 31,795 ரூபாய் மதிப்புள்ள, மோட்டார் பொருத்திய தையல் மெஷின், மூன்று பேருக்கு, 48 ஆயிரத்து, 597 ரூபாய் மதிப்புள்ள திறன் பேசி என, 87 பயனாளிகளுக்கு, மொத்தம், 81.29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.