/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெஸ்ட்கோஸ்ட் ரயில் இன்று தாமதமாகும்!
/
வெஸ்ட்கோஸ்ட் ரயில் இன்று தாமதமாகும்!
ADDED : ஜன 30, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மங்களூரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் நாளை (பிப்., 1 ம் தேதி) இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், ஒட்டப்பாலம் - லக்கிடி இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால், இன்று இரவு, 11:45 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22638) இரண்டு மணி நேரம் தாமதமாக, நாளை (பிப்., 1ம் தேதி) அதிகாலை, 1:45 மணிக்கு புறப்படும். இதனால், கோவைக்கு காலை, 7:35 மணிக்கு பதிலாக, 9:35 மணிக்கும், திருப்பூருக்கு, காலை, 8:13 மணிக்கு பதிலாக, 10:13 மணிக்கும் மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில் வரும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

