/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; மேற்கு மண்டல பயணிகள் மகிழ்ச்சி
/
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; மேற்கு மண்டல பயணிகள் மகிழ்ச்சி
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; மேற்கு மண்டல பயணிகள் மகிழ்ச்சி
ரயில்களில் பெட்ஷீட் வழங்கும் திட்டம்; மேற்கு மண்டல பயணிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 16, 2025 06:45 AM
திருப்பூர்: ரயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு வழங்கப்படுவது போல, படுக்கை விரிப்பு, தலையணை, படுக்கை வசதி பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கும் புத்தாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இப்பட்டியலில், கோவை, திருப்பூர் வழியாக செல்லும், நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட ஐந்து ரயில்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணிக்கும் முதல் வகுப்பு ஏ.சி. இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டும் படுக்கை விரிப்பு, தலையணை வழங்கப்பட்டு வருகிறது. ஏ.சி. அல்லாத படுக்கை வசதி (ஸ்லீப்பர்) பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் புத்தாண்டு முதல் படுக்கை விரிப்பு, தலையணை வழங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஜன. 1ம் தேதி முதல் தெற்கு ரயில்வேயில் பத்து ரயில்களில் இத்திட்டம் அமலாக உள்ளது. இப்பட்டியலில், மேட்டுப்பாளையம் - கோவை (எண்:12671) நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - சென்னை (எண்:12695), ஆலப்புழா - சென்னை (எண்:22639), மங்களூரு - சென்னை எழும்பூர் (எண்:16159) திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் (எண்:12695) ஆகிய ஐந்து ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் ஐந்து ரயில்கள் தலையணை, பெட்சீட் வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பயணத்திலும் வாங்கலாம்! ரயில் டிக்கெட் முன் பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், 'ஏ.சி. வசதி அல்லாத படுக்கை வசதி பெட்டிகளில் வர உள்ள பெட்ஷீட், தலையணை திட்டம் அனைத்து பயணிகளுக்கு கட்டாயம் அல்ல. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, வசதியின் தேவை குறித்து கேட்கப்படும்.
தேவையெனில் தேர்வு செய்யலாம். ரயிலில் பயணிக்கும்போது கூட, பயணிகள் அதற்கான கட்டணத்தை செலுத்தி, படுக்கை விரிப்பு, தலையணை பெற்றுக் கொள்ள முடியும்,' என்றார்.

