/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திமிங்கல எச்சம் கடத்தியவர் கைது
/
திமிங்கல எச்சம் கடத்தியவர் கைது
ADDED : ஜன 12, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் பல்லடம் ரோடு கணபதிபாளையத்தில் திமிங்கலத்தின் எச்சம் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
திருப்பூர் வனச்சரக அலுவலக பணியாளர்கள் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர்.
இதுதொடர்பாக, ராஜேந்திரன், 52 என்பவரை பிடித்தனர். விசாரணையில், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எச்சத்தை சிவகாசியில்இருந்து ஒருவரிடம் வாங்கி வந்து, விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரிந்தது.
அவரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

