/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.3 ஊக்கத்தொகை என்னாச்சு? பால் உற்பத்தியாளர் கேள்வி
/
ரூ.3 ஊக்கத்தொகை என்னாச்சு? பால் உற்பத்தியாளர் கேள்வி
ரூ.3 ஊக்கத்தொகை என்னாச்சு? பால் உற்பத்தியாளர் கேள்வி
ரூ.3 ஊக்கத்தொகை என்னாச்சு? பால் உற்பத்தியாளர் கேள்வி
ADDED : அக் 02, 2024 06:44 AM
திருப்பூர் : தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், லிட்டருக்கு மூன்று ரூபாய் வீதம், ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தது.
கடந்த ஆண்டு துவங்கி, தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக, ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. திருப்பூர் மாவட்டத்தில், ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில், 441 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன; தினமும், 1.80 லட்சம் லிட்டர் பால் ஆவினுக்கு வழங்கப்படுகிறது. ஆறு மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மூன்று மாதங்களாக ஊக்கத்தொகை வழங்க இயலவில்லை.
இது குறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், 'அரசு அறிவித்தபடி, லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென, ஆவின் அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். அரசு நிதி ஒதுக்கினால், ஊக்கத்தொகையை விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி, பால் உற்பத்தியாளருக்கான ஊக்கத்தொகையை தடையின்றி வழங்க வேண்டும்,' என்றனர்.