sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய வணிக வளாகத்துக்கு எந்தப் பெயர்? தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., மோதல்

/

புதிய வணிக வளாகத்துக்கு எந்தப் பெயர்? தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., மோதல்

புதிய வணிக வளாகத்துக்கு எந்தப் பெயர்? தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., மோதல்

புதிய வணிக வளாகத்துக்கு எந்தப் பெயர்? தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., மோதல்


ADDED : அக் 25, 2024 10:44 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசியில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்துக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கவுன்சிலர்களிடையே பேரூராட்சி கூட்டத்தில் மோதல் வெடித்தது.

அவிநாசி பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் மோகன், செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

சிவப்பிரகாஷ்(தி.மு.க.,) :- அவிநாசியில் பழைய பஸ் நிலையம் இருந்த இடத்தில், பேரூராட்சி மூலம் கட்டப்பட்ட புதிய வணிக வளாக கட்டடத்திற்கு 'கலைஞர் நுாற்றாண்டு நினைவு வணிக வளாகம்' என பெயர் சூட்ட வேண்டும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஏற்கனவே அண்ணா பஸ் நிலையம் என்ற பெயரில் தான் இருந்தது. அதே பெயரில் தான் இருக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். உடனே தி.மு.க., கவுன்சிலர்கள் அ.தி.மு.க., ஆட்சியில் மட்டும் 'அம்மா' உணவகம் என பெயர் வைத்திருக்கும் போது ஏன் 'கலைஞர்' பெயர் வைக்கக்கூடாது என கேட்டனர்.

இதற்கிடையில் ஏற்கனவே எந்த பெயரில் இருந்ததோ அதே பெயரை சூட்டுங்கள் அல்லது காமராஜர் நினைவு பஸ் நிலையம் என பெயர் வைக்க வேண்டும் என காங்., கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

இது விவாதமாக மாறியது.

கோபாலகிருஷ்ணன் (காங்.,) பேசுகையில், ''அவிநாசி பழைய பஸ் நிலைய வணிக வளாகத்திற்கு காந்தி - காமராஜர் வணிக வளாகம் என்ற பெயரிட வேண்டும்'' என்றார்.

ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,) பேசுகையில், ''வணிக வளாக கட்டடத்திற்கு முதலில் இருந்த பெயரான அண்ணாதுரை - எம்.ஜி.ஆர்., பெயரையே சூட்ட வேண்டும்'' என்றார்.

தங்கவேலு (தி.மு.க.,): - சூளை காமராஜ் நகர் இடைப்பட்ட பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. புனித தோமையர் பெண்கள் பள்ளி செல்லும் ரோடு வரை சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும்.

கருணாம்பாள் (காங்.,): - 8வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கடைக்காக 1வது வார்டு பகுதியில் காமராஜ் நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வருகின்றனர். பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தி வந்த பாதை கம்பி வேலி போட்டு தடுக்கப்பட்டுள்ளது. கம்பி வேலியை அகற்றி பொதுமக்கள் நடைபாதை பயன்பாட்டிற்காக மட்டும் உபயோகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பர்ஹத்துல்லா (தி.மு.க.,): அவிநாசி பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தின் பின்பாக பொதுக் கழிப்பிடம் அமைத்திட வேண்டும்.

கவிதா (அ.தி.மு.க.,): - பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் மடத்துப்பாளையம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான பழைய வானொலி நிலைய கட்டடத்தை பொதுமக்களுக்காக நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கிட உபயோகப்படுத்தி கொள்ள ஒப்படைப்புச் சான்று கேட்டுள்ளார்கள் . கட்டடத்தை வாடகை இல்லாமல் ரேஷன் கடை பொருட்கள் வழங்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

கவுன்சிலர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைவர் தனலட்சுமி கூறினார்.

----

2 படங்கள்

அவிநாசியில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டக்கோரி பேரூராட்சி தலைவர் தனலட்சுமியிடம் மனு அளித்த தி.மு.க., கவுன்சிலர்கள்.

முன்பிருந்த அண்ணாதுரை பெயரே தொடர வேண்டும் என்று மனு அளித்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்.

அ.தி.மு.க., வெளிநடப்பு

தமிழக அரசு ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க, கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.



துார்வார வேண்டும்

திருமுருகநாதன் (தி.மு.க.,): - அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட போர்வெல்கள், கிணறுகள் எத்தனை பயன்பாட்டில் உள்ளது என தெரிந்து, பயன்பாட்டில் இல்லாதவற்றை மூட வேண்டும். சங்கமாங்குளம், தாமரைக்குளம் ஆகியவற்றுக்கு நீர்வழிப் பாதைகளை துார்வாரவும் மதகுகள், ஷட்டர்களை பராமரிப்பு பணிகள் செய்யவும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பொதுப்பணி துறைக்கு அறிவுறுத்த வேண்டும். 2018ல் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் சீனிவாசபுரம் பகுதி மக்கள் மீளவில்லை. மழைக்காலம் அதிகரிக்கும் முன்பாக இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.








      Dinamalar
      Follow us