/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இதென்ன... அதென்ன?' கேள்விகளால் துளைத்த ரயில்வே பொதுமேலாளர்
/
'இதென்ன... அதென்ன?' கேள்விகளால் துளைத்த ரயில்வே பொதுமேலாளர்
'இதென்ன... அதென்ன?' கேள்விகளால் துளைத்த ரயில்வே பொதுமேலாளர்
'இதென்ன... அதென்ன?' கேள்விகளால் துளைத்த ரயில்வே பொதுமேலாளர்
ADDED : ஜன 09, 2024 11:15 PM

திருப்பூர்:அம்ரித் பாரத்' திட்ட பணி குறித்து ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர், பல்வேறு பணிகள் குறித்து, கேள்விமேல் கேள்வி கேட்டு, அதிகாரிகளை திணறடித்தார்.
சென்னையில் இருந்து கோவை மற்றும் திருச்சிக்கு ஒரு நாள் பயணமாக, சிறப்பு ரயில் மூலம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் வந்தார்.
கோவையில் இருந்து திருப்பூர் வந்த அவர்,'திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணி குறித்து ஆய்வு நடத்தினர். லிப்ட், எஸ்கலேட்டர், பிளாட்பார்ம், நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
'ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணி தரமானதாக, வேகமாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை அப்பணி குறித்து கேள்வி கேட்கும் வகையில், பணி நடக்க கூடாது.
நிதி ஒதுக்கீடு செய்து, திட்டம் வகுக்கப்படும் போது என்னென்ன அம்சங்கள் கூறப்படுகிறதோ அதனையே தொடர வேண்டும். அதில், எந்த மாறுதல்களையும் செய்யக்கூடாது,' என, பொது மேலாளர் சிங் தெரிவித்தார்.
ஆய்வு நடத்திய பொது மேலாளரிடம் புதிய பணி குறித்த மாதிரி வரைபடத்தை திருப்பூர் அதிகாரிகள் காண்பித்தனர். அதனை பொறுமையாக பார்வையிட்ட அவர், அங்கிருந்த ஒருவரிடம் பென்சில் கொடுங்க என வாங்கினார் வரைபடத்தில் ஒவ்வொரு இடத்திலும் மார்க் செய்து 'இதென்ன... அதென்ன!' என கேள்வி கேட்டார்.
திருப்பூர் அலுவலர்கள் தட்டுத்தடுமாறியபடி பதிலளிக்க, 'நான் நேரில் பார்க்க வேண்டும்,' என்று கூறி, ஒரு மணி நேரம் ஸ்டேஷன் முழுவதும், ஆய்வு நடத்தி, பின் புறப்பட்டு சென்றார்.

