தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ்களில் தொங்கல் பயணம்: எப்போது விடிவு பிறக்கும்?

பஸ்களில் தொங்கல் பயணம்: எப்போது விடிவு பிறக்கும்?

பஸ்களில் தொங்கல் பயணம்: எப்போது விடிவு பிறக்கும்?


UPDATED : ஆக 23, 2026 10:19 PM

ADDED : ஆக 23, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 10:19 PM ADDED : ஆக 23, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:பல்லடம் வழியாக கோவைக்குச் செல்லும் பஸ்களில் தினசரி ஏற்படும் கடும் கூட்ட நெரிசலால், பெண்கள் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய அவதி தொடர்கிறது.

பல்லடத்தில் இருந்து கோவை, திருப்பூருக்கு வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பஸ்களைச் சார்ந்துள்ளனர். குறிப்பாகக் காலை 7:00 முதல் 9:00 மணி வரை பஸ்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுகிறது. முன்பக்கப் படிக்கட்டில் மாணவியரும், பெண்களும் நெரிசலில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை உள்ளது.

தானியங்கி கதவுகளைக் கூட மூட முடியாத அளவுக்குச் செல்ல இடமின்றி பயணிகள் திணறுகின்றனர். வேகத்தடைகள் மற்றும் வளைவுகளில் திரும்பும்போது தவறி விழும் அபாயம் இருந்தும், நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆபத்தை உணர்ந்தே பயணிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காலை நேரங்களில் திருப்பூர் -- கோவை மார்க்கத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us