/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார நிலையத்துக்கு 'பூட்டு' எப்போது மக்களுக்கு பயன்பாடு? கழிவு வெளியேறுமா?
/
சுகாதார நிலையத்துக்கு 'பூட்டு' எப்போது மக்களுக்கு பயன்பாடு? கழிவு வெளியேறுமா?
சுகாதார நிலையத்துக்கு 'பூட்டு' எப்போது மக்களுக்கு பயன்பாடு? கழிவு வெளியேறுமா?
சுகாதார நிலையத்துக்கு 'பூட்டு' எப்போது மக்களுக்கு பயன்பாடு? கழிவு வெளியேறுமா?
ADDED : ஏப் 21, 2025 05:26 AM

திருப்பூர், நொய்யல் ஆற்றுப்பாலம் ரோடு - நடராஜ் தியேட்டர் ரோடு சந்திப்பில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதால், கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.
- நடராஜன், கருவம்பாளையம். (படம் உண்டு)
ஆபத்து நீங்குமா?
திருப்பூர் நேரு வீதி - நஞ்சப்பா ஸ்கூல் சந்திப்பில் வாகன ஓட்டிகள் மீது உரசும் வகையில் கம்பிகள் நீட்டியபடி ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகிறது.
- வின்சென்ட்ராஜ், நஞ்சப்பா ஸ்கூல் வீதி. (படம் உண்டு)
தொல்லை அகலுமா?
நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டனில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- ரவி, ஜி.என்.கார்டன். (படம் உண்டு)
சீர்கேடு ஒழியுமா?
கே.செட்டிபாளையம், பழனியாண்டவர் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். தொட்டி அருகே குப்பை தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
-- பழனிகுரு, பழனியாண்டவர் நகர். (படம் உண்டு)
மரம் அகற்றப்படுமா?
சூசையாபுரம், இரண்டாவது வீதியில் உள்ள மரம் வலுவிழந்து விழும் நிலையில் உள்ளது. விழுவதற்கு முன் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.
- ராஜ், சூசையாபுரம். (படம் உண்டு)
அடைப்பு நீங்குமா?
திருப்பூர் அவிநாசி ரோடு, டீச்சர்ஸ் காலனி இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- சபரீஷ், டீச்சர்ஸ் காலனி. (படம் உண்டு)
பயன்பாடுக்கு வருமா?
திருப்பூர், ஆறாவது வார்டு, பாலன் நகரில் மாநகராட்சி துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- உதயகுமார், பாலன் நகர். (படம் உண்டு)
வால்வு மாற்றப்படுமா?
திருப்பூர், எட்டாவது வார்டு, கருப்பராயன் நகர் மூன்றாவது வீதியில் கேட்வால்வு பழுதாகி மின்கம்பம் அருகே பீய்ச்சியடித்தபடி தண்ணீர் வெளியேறுகிறது.
-- சதாசிவம், கருப்பராயன் நகர். (படம் உண்டு)
திருப்பூர், 32வது வார்டு, சூர்யா காலனியில் கேட்வால்வு பழுதாகியிருப்பதால், தண்ணீர் அடைத்த பின் தொடர்ந்து வீணாகிறது. கேட்வால்வை மாற்ற வேண்டும்.
- தங்கமுத்து, சூர்யா காலனி. (படம் உண்டு)
ரியாக் ஷன்
சுத்தமானது பூங்கா
கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் 'அம்மா' பூங்காவில் மழையால் மரங்கள் சாய்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக 'தினமலர் 'நாளிதழில் செய்தி வெளியானது. சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றி, பூங்காவை சுத்தம் செய்து விட்டனர்.
- உதயகுமார், அருள்புரம். (படம் உண்டு)