/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு போட்டி எப்போது?
/
போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு போட்டி எப்போது?
ADDED : ஆக 28, 2025 11:23 PM
மு தல்வர் கோப்பை போட்டிகளில், பொதுமக்களுடன் போலீஸ் அணிகளும் இணைந்து விளையாடும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார், பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நல்லுறவு விளையாட்டு போட்டி, இருமுறை நடத்தப்பட்டு வந்தது. இதில், வாலிபால், கபடி, தடகளம் மற்றும் குழந்தைகளுக்கான லெமன் ஸ்பூன், கயிறு இழுத்தல் என பல்வேறு போட்டிகள் இடம்பெறும்.
போட்டி குறித்து போலீஸ் தரப்பில் முறையாக மக்கள் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டு நடத்தப்படும். இதில், விளையாட்டு ஆர்வலர்கள் உட்பட சிறியவர் முதல் பெரியவர் வரை பங்கேற்பது வழக்கம்.
இந்தாண்டு துவக்கத்தில் பொங்கல் தின விளையாட்டு போட்டி என்று, மக்களிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் மாநகர போலீசார் நடத்தி முடித்தனர். அதில், பெரும்பாலும், போலீசார், அவர்களது குடும்பத்தினர் தான் பங்கேற்றனர். பொதுமக்கள் பெரியளவில் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகள் முன் நடத்தப்பட்டது போல், முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு நல்லுறவு விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.
இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்ட காரணத்தால், மக்கள் எளிதாக போலீசாரை அணுகி தங்கள் பகுதி குற்றங்கள் குறித்து தெரியப்படுத்த வழிவகை செய்யப்பட்டு இருந்தது.