/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் எப்போது?
/
இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் எப்போது?
ADDED : நவ 07, 2025 11:04 PM
திருப்பூர்: வெள்ளகோவில், காங்கயம், ஊதியூரில் தெருநாய் கடித்து பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஊதியூரில், நாய்கள் கடித்து குதறியதில், கடந்த 3 நாளில் மட்டும், 22 ஆடுகள்,பலியாகியிருக்கிறது. 'இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியல் நடத்தினர்.
இதுதொடர்பாக காங்கயம் தாசில்தார், அளித்துள்ள விளக்கம்:
கடந்த, 2024 அக்., 24 முதல், 2025 மார்ச் 21 வரை நாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகளுக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2024 அக்., 24க்கு முன் இறந்த கால்நடைகளுக்கும், 2025 மார்ச் 22க்கு பின் இறந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சு நடத்தியதில், கலெக்டர் வாயிலாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

