/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓ.ஆர்.எஸ்., கரைசல் எப்போது? அரசு பஸ் ஊழியர்கள் காத்திருப்பு
/
ஓ.ஆர்.எஸ்., கரைசல் எப்போது? அரசு பஸ் ஊழியர்கள் காத்திருப்பு
ஓ.ஆர்.எஸ்., கரைசல் எப்போது? அரசு பஸ் ஊழியர்கள் காத்திருப்பு
ஓ.ஆர்.எஸ்., கரைசல் எப்போது? அரசு பஸ் ஊழியர்கள் காத்திருப்பு
ADDED : மார் 31, 2025 11:46 PM
திருப்பூர்; கோடை வெப்பத்தை சமாளிக்க ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மோர், ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், திருப்பூரில் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகங்களுக்கு துறை செயலர் அறிவுரையாக வழங்கியுள்ளார். அதில், 'பஸ் ஸ்டாண்ட், நேரக் கண்காணிப்பாளர் அறை, உணவகம், ஓய்வு அறை உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர், மோர் ஏற்பாடு செய்திட வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, ஓ.ஆர்.எஸ்., கரைசல் பொட்டலங்களை டிரைவர், நடத்துனருக்கு வழங்க வேண்டும். அவ்வப்போது அருந்த ஏதுவான வசதிகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர், காங்கயம் ரோட்டில் டிப்போ 1 மற்றும் 2, மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இதுவரை டிரைவர், நடத்துனருக்கு ஓ.ஆர்.எஸ்., கரைசல் பொட்டலம் வழங்கவில்லை. பணிமனைகளில் விரிவான, காற்றோட்டமான வசதி ஏற்படுத்தப்படவில்லை. கூடுதல் குடிநீர் இல்லாமல், வழக்கமான குடிநீர் மட்டுமே இருப்பதாக, பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து கழக, திருப்பூர் மண்டல நிர்வாகம் சிரத்தையுடன் பணியாற்றும் டிரைவர், நடத்துனர் உள்ளிட்ட தொழிலாளர்கள் நிலையை புரிந்து, விரிவான குடிநீர் வசதி ஏற்படுத்துவதுடன், தாமதமின்றி ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கவும் முன்வர வேண்டும் என்பதே போக்குவரத்து தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

