/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் வழித்தடம் சீரமைப்பு எப்போது?
/
கோவில் வழித்தடம் சீரமைப்பு எப்போது?
ADDED : அக் 25, 2025 01:10 AM

பல்லடம்: சேறும், சகதியுமாக உள்ள மாதப்பூர் முத்துக் குமாரசுவாமி கோவிலுக்கு செல்லும் வழியை, சூரசம்ஹார விழாவுக்கு முன் சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பல்லடம் அடுத்த, மாதப்பூரிலுள்ள முத்துக்குமாரசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.
குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலில், வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
தற்போது கந்த சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள், சூரசம்ஹாரம், 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது. இந்த விசேஷத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், கோவில் நுழைவுவாயில் முதல் கோவில் வரையிலான வழித்தடம், தொடர் மழையால், சேறும் சகதியுமாக மாறி விட்டது.
தொடர் மழை பெய்து வருவதாலும், கோவிலுக்கு செல்லும் வழி மோசமாக இருப்பதாலும், பக்தர்கள் அவதிக்குள்ளாவர் என்பதால், சூரசம்ஹார வைபவத்துக்கு முன், அந்த வழியை சீரமைக்க வேண்டும்.
எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற சிக்கல் ஏற்படாத வகையில், புதிய ரோடு அமைக்க அறநிலையத்துறை நடவடி க்கை எடுக்க வேண்டும்.

