/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனித்துவம் வாய்ந்த சேவூர் நிலக்கடலை புவிசார் குறியீடு எப்போது கிடைக்கும்?
/
தனித்துவம் வாய்ந்த சேவூர் நிலக்கடலை புவிசார் குறியீடு எப்போது கிடைக்கும்?
தனித்துவம் வாய்ந்த சேவூர் நிலக்கடலை புவிசார் குறியீடு எப்போது கிடைக்கும்?
தனித்துவம் வாய்ந்த சேவூர் நிலக்கடலை புவிசார் குறியீடு எப்போது கிடைக்கும்?
ADDED : ஏப் 08, 2025 10:27 PM
- நமது நிருபர்-
அவிநாசி அடுத்த சேவூரில் விளையும் நிலக்கடலைக்கு, புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மாநிலத்தில், ஒவ்வொரு நகரத்திற்கும் குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவ்வகையில், தமிழகத்தில் ஆரணிப்பட்டு, ஈரோடு மஞ்சள், உடன்குடி கருப்பட்டி, ஊட்டி வர்க்கி, ஊத்துக்குளி வெண்ணெய், கம்பம் பன்னீர் திராட்சை, காஞ்சிபுரம் பட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை, கொடைக்கானல் மலைப்பூண்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய், சேலம் சுங்கடி, சோழவந்தான் வெற்றிலை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பத்தமடை பாய் உட்பட இதுவரை, 62 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரம், சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், அவிநாசி, புளியம்பட்டி, நம்பியூர், அந்தியூர், ஊத்துக்குளி, குன்னத்துார் உள்ளிட்ட இடங்களில், மானாவாரி பயிராக விளையும் நிலக்கடலைக்கும், புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு விளையும் நிலக்கடலையில், எண்ணெய் சத்து அதிகம். கடலை எண்ணெய், கடலை மிட்டாய் தயாரிப்புக்கு, இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
மானாவாரி பயிரான நிலக்கடலை, ஆண்டுதோறும் செப்., துவங்கி. நவ., வரை விளைச்சல் இருக்கும். இக்கால கட்டத்தில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது; கிட்டதட்ட, 3,000 டன் நிலக்கடலை மகசூலாக பெறப்பட்டு, கூட்டுறவு விற்பனைக்கூடம் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.