/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிம்மதி எப்போது? வெறிநாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு
/
நிம்மதி எப்போது? வெறிநாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு
நிம்மதி எப்போது? வெறிநாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு
நிம்மதி எப்போது? வெறிநாய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2025 12:31 AM
பொங்கலூர்; சமீப காலமாய் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகளை நாய்கள் வேட்டையாடி வருகின்றன. இதனால், விவசாயிகளின் கோபம் நாய்களின் மீது திரும்பி உள்ளது. நாய்களின் மீது கடும் கோபத்தையும், வெறுப்பையும் விவசாயிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கால்நடை விவசாயிகள் கூறியதாவது:
சில கிராமங்களில் விவசாயம் பொய்த்ததால், ஆடு, கோழி ஆகியவையே விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளன. அவற்றை மொத்தமாக வெறி நாய்கள் கடித்து விடுவதால் அடுத்து வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்ற கவலையில் விவசாயிகள் மனநோயாளிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. முதலில் ஒவ்வொருவரும் நாய் கிராமங்கள் தோறும், வார்டுகள் தோறும் நாய் வளர்ப்பை பதிவு செய்து நாய்களுக்கு அடையாள அட்டை பொருத்த வேண்டும். அதில் உரிமையாளர் பெயர் முகவரி பெரிதாக இருக்க வேண்டும். ஆங்காங்கே கூண்டு வைத்து வெறி நாய்களை பிடிக்க வேண்டும். நாய்களுக்கு உணவு கிடைக்காமல் வெறி நாய்களாக மாறி விடுகின்றன. இது விஷயத்தில், அரசு கண்டும் காணாமல் இருப்பது முறை அல்ல. இப்பிரச்னையை முழுமையாக தீர்க்க முன்வர வேண்டும் என்றனர்.
13 கோழிகள் பலி
நேற்று பொங்கலூர் குளத்துப்பாளையம் முத்துரத்தினம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து, 13 கோழிகளை வெறிநாய்கள் கடித்துக் குதறியது. இது குறித்து கண்டியன் கோவில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆடு, கோழி என கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் வெறி நாய்கள் கடித்து குதறுவது விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.