தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிரச்னைகளை எங்கே சொல்வது? மாற்றுத்திறனாளிகள் குமுறல்: குறை உண்டு... கேட்பார் இல்லை

பிரச்னைகளை எங்கே சொல்வது? மாற்றுத்திறனாளிகள் குமுறல்: குறை உண்டு... கேட்பார் இல்லை

பிரச்னைகளை எங்கே சொல்வது? மாற்றுத்திறனாளிகள் குமுறல்: குறை உண்டு... கேட்பார் இல்லை


UPDATED : ஆக 23, 2026 09:03 PM

ADDED : ஆக 23, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 09:03 PM ADDED : ஆக 23, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாததால், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட கூட்டம் நிறுத்தப்பட்டதால், தற்போது பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நெரிசலுக்கு இடையே மனு அளிக்க வேண்டியுள்ளது.

அரசு அலுவலகங்களில் அணுகுமுறை வசதியின்மை, கழிப்பிட சீர்கேடு, பேட்டரி வாகன சேவை முடக்கம், மருத்துவ முகாமில் கண் மருத்துவர் வராதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்வதாக மாற்றுத்திறனாளி மகாதேவன் தெரிவித்தார். எனவே, 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைகேட்பு கூட்டம் நடத்துவதுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விலை உண்டு... பயன் இல்லை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சூறைக்காற்றால் நேந்திரன் வாழை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை நல்ல விலை கிடைத்தும், மகசூல் குறைந்ததால் விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தை பெற முடியவில்லை.

மடத்துக்குளம், உடுமலை, பொங்கலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் 2,500 முதல் 3,000 ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக 25 முதல் 30 கிலோ எடை கொண்ட வாழைத்தார், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் 12 முதல் 14 கிலோ மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வசதி உண்டு... இன்னல் இல்லை

திருப்பூர்:திருப்பூரில் விரிவுபடுத்தப்பட்ட ஆர்.எம்.எஸ்., மையத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் ஸ்பீடு போஸ்ட் தபால்கள், 33,700 பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.4.01 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

காலேஜ் ரோட்டில் செயல்படும் இம்மையத்தில் 24 மணி நேரமும் தபால், பார்சல் அனுப்பும் வசதி உள்ளது. 500 கிராம் முதல் 35 கிலோ வரை பார்சல்கள் அனுப்பலாம். தனி பேக்கிங் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல்களும் முறையாக பேக்கிங் செய்து தரப்படுகின்றன. ஆதார் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.

குறை உண்டு... கேட்பார் இல்லை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக குறைகேட்பு கூட்டம், மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாததால், பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பதிவு செய்துள்ளனர். உதவித்தொகை, உபகரணங்கள், அரசு சலுகைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, முன்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

தற்போது கூட்டம் நடைபெறாததால், திங்கள்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நெரிசலுக்கு மத்தியில் மனு அளிக்க வேண்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், அலுவலகங்களில் அணுகுமுறை வசதி, கழிப்பிட பராமரிப்பு, பேட்டரி வாகன சேவை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை. எனவே, மீண்டும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரத்யேக குறைகேட்பு கூட்டம் நடத்தவும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தனி அலுவலரை நியமிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலை உண்டு... விளைச்சல் இல்லை

திருப்பூர்:மழை பொய்ப்பு, வறட்சி மற்றும் சூறைக்காற்றால் திருப்பூர் மாவட்டத்தில் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி வாழைக்காய்க்கு நல்ல விலை கிடைத்தாலும், மகசூல் குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மடத்துக்குளம், உடுமலை, பொங்கலுார், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில், 2,500 முதல் 3,000 ஹெக்டேரில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கேரளாவில் தேவை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ வாழைக்காய், 50 முதல் 55 ரூபாய் வரை விற்பனையாகிறது.

ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் வாழைத்தார்களின் எடை பாதியாக குறைந்துள்ளது. வழக்கமாக, 25 முதல் 30 கிலோ இருக்கும் ஒரு தார், தற்போது 12 முதல் 14 கிலோ மட்டுமே இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால், விலை நல்ல நிலையில் இருந்தும், குறைந்த மகசூலால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.-

வசதி உண்டு... இன்னல் இல்லை

திருப்பூர்:திருப்பூரில் விரிவுபடுத்தப்பட்ட புதிய ஆர்.எம்.எஸ்., மையத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில், 20 ஆயிரம் ஸ்பீடு போஸ்ட் தபால்கள் மற்றும், 33 ஆயிரத்து 700 பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இடநெருக்கடியில் இயங்கி வந்த அலுவலகம், காலேஜ் ரோட்டுக்கு மாற்றப்பட்டு, ஜூன் இறுதி வாரம் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, தபால் மற்றும் பார்சல்களை, 24 மணி நேரமும் அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும், 4.01 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது வழக்கமான மாத வருவாயை விட, 50 ஆயிரம் ரூபாய் அதிகம். ஆதார் சேவை மையத்திலும் தினமும், 40 முதல் 50 பேர் சேவை பெறுகின்றனர்.

மேலும், பார்சல்களை முறையாக பேக்கிங் செய்து அனுப்ப தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பார்சல் அனுப்பும் வசதி இருப்பதால், புதிய மையத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us