/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., நீர் எங்கே: விவசாயிகள் ஆதங்கம்
/
பி.ஏ.பி., நீர் எங்கே: விவசாயிகள் ஆதங்கம்
ADDED : ஏப் 19, 2025 11:29 PM
திருப்பூர்: பி.ஏ.பி., வாய்க்காலின் கடைமடை பகுதிகளாக காங்கயம், வெள்ளகோவில் பகுதிகள் உள்ளன. வாய்க்காலில் நீர் திறந்துவிடும் போதெல்லாம், கடைமடைக்கு நீர் சரிவர வந்து சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கின்றனர். தற்போது கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், இதே குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
தேவையான அளவு நீர் திறந்து விடப்பட்டும், கடைமடை விவசாயிகளுக்கு நீர் வந்து சேரவில்லை. நீர் வினியோகம் தொடர்பாக, சிறப்பான சட்ட விதிகள், நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும், பி.ஏ.பி., நிர்வாகம் அதை கண்டுகொள்வதில்லை. 5 நாட்கள் தண்ணீர் தெளிவுபட அனைத்து மடைகளையும் சென்றடைய வேண்டும் என்பதே, விவசாயிகளின் கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 22ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பி.ஏ.பி., அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் துவங்கவுள்ளோம்.பல இடங்களில் ஏழு நாட்களுக்கு தண்ணீர் பாய்கிறது. பெரும்பாலான இடங்களில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு நீர் எடுக்கப்படுகிறது.
காங்கயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகளுக்கு வரவேண்டி நீரில், 40 சதவீதம் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

