/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச பட்டாவுக்கு நிலம் எங்கே? 30 ஆண்டுகளாக தேடும் மக்கள்
/
இலவச பட்டாவுக்கு நிலம் எங்கே? 30 ஆண்டுகளாக தேடும் மக்கள்
இலவச பட்டாவுக்கு நிலம் எங்கே? 30 ஆண்டுகளாக தேடும் மக்கள்
இலவச பட்டாவுக்கு நிலம் எங்கே? 30 ஆண்டுகளாக தேடும் மக்கள்
ADDED : டிச 18, 2024 12:22 AM

திருப்பூர்; அவிநாசி தாலுகா, ஈட்டிவீரம்பாளையம் பகுதி மக்களுக்கு, கடந்த 1994ல், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை, மனையிடத்தை அளந்து கொடுக்கவில்லை. பட்டாவுக்கான இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் நேற்று பெருமாநல்லுார் முதல் கலெக்டர் அலுவலகம் வரை நடை பயணம் அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மா.கம்யூ.,வினர் பெருமாநல்லுார் நால்ரோட்டில் திரண்டனர். அங்கிருந்து புறப்பட்டு, அரசு பள்ளி வரை நடந்து வந்த மக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனத்தில், கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், ஒன்றிய செயலாளர் காளியப்பன் உட்பட பலர் பேசினர்.
மா.கம்யூ., நிர்வாகிகள் கூறுகையில், 'ஈட்டிவீரம்பாளையத்தில், 122 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், வருவாய்த்துறை சார்பில் நிலத்தை அளவீடு செய்து தரவில்லை. இதுகுறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனுமில்லை. பட்டா வழங்கப்பட்ட இடத்துக்கான நிலத்தை உடனடியாக அளவீடு செய்து கொடுக்கவேண்டும்,' என்றனர்.