/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எந்த இடத்தில் அமைகிறது தெற்கு போலீஸ் ஸ்டேஷன்?
/
எந்த இடத்தில் அமைகிறது தெற்கு போலீஸ் ஸ்டேஷன்?
ADDED : மார் 23, 2025 11:26 PM
திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இட நெருக்கடி நிலவுகிறது. தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது.
இதற்காக, பல்லடம் கலெக்டர் அலுவலகம் அருகே மற்றும் நொய்யல் வீதி என, இரண்டு இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு உயரதிகாரிகள் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இரு இடத்தில் ஏதாவது இடம் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் இதற்கான பணி ஆரம்பிக்க உள்ளது.
மேலும், ஸ்டேஷனை பழைய கலெக்டர் அலுவலகம் உள்ளே தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடக்கிறது.