ADDED : ஜூன் 27, 2025 11:50 PM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் நேற்று, கூனம்பட்டி அருகே, 2,200 தைல (யூகலிப்டஸ்) மரக்கன்று நடும் பணி துவங்கியது.
'வனத்துக்குக்குள் திருப்பூர் -11' திட்டம் கடந்த வாரம் துவங்கியது; மாவட்டம் முழுவதும், தயார்நிலையில் இருந்த விவசாய நிலங்களில், மரக்கன்று நடவுப்பணி வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, பருவமழையை பயன்படுத்தி மரக்கன்று நடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி தாலுகா, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டிபுதுாரில், தண்டபாணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மரக்கன்று நடவு பணி துவங்கியது. சொட்டுநீர் பாசன கட்டமைப்புடன், மரக்கன்று நட்டு வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திட்டக்குழுவினரும், நில உரிமையாளர் குடும்பத்தினரும் நேற்று, மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர்.
அவரது நிலத்தில், 2,200 'யூகலிப்டஸ்' எனப்படும் தைல மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.