/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எந்த அணிக்கு மகுடம் கிடைக்கும்?
/
எந்த அணிக்கு மகுடம் கிடைக்கும்?
ADDED : ஏப் 26, 2025 11:32 PM

பதினெட்டாவதுஐ.பி.எல்., சீசன் கடந்த மார்ச் 22ல் துவங்கியது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. மொத்தம், 70 லீக் போட்டிகள்; இதில், 44 போட்டிகள் முடிவடைந்து இன்னமும் 26 போட்டிகள் மீதமுள்ளன. பத்து அணிகளும், தலா, 14 போட்டிகளில் விளையாடுகின்றன.
மே முதல் வாரத்தில் 'பிளேஆப் சுற்று' போட்டிகள் துவங்குகின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி குஜராத், டில்லி, பெங்களூரு, மும்பை அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. திருப்பூர் ரசிகர்கள் சிலரது கணிப்புகள், இதோ:
கார்த்திகேயன், கொடிக்கம்பம், கொங்கு மெயின் ரோடு:
தொடரின் துவக்கம் முதலே, பேட்டிங் -  பந்துவீச்சு இரண்டிலும் குஜராத் அணி அசத்துகிறது. குறிப்பாக, பேட்டிங்கில் சாய்சுதர்சன், ஜோஸ் பட்லர் அதிரடி காட்டுகின்றனர். பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, சாய்கிேஷார் அசத்தி வருகின்றனர்.
ஏற்கனவே எட்டில் வெற்றி பெற்று விட்டதால், இனி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என்பதால், இம்முறை நிச்சயம் குஜராத் அணி 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறி, இறுதி போட்டியில் வென்று, கோப்பையை கைப்பற்றும்.
பரணிதரன், அவிநாசிபாளையம்:
குஜராத் அணியை போலவே, எட்டுக்கு ஆறு போட்டிகளை டில்லி அணி வென்றிருந்தாலும், ரன் ரேட் குறைவாகவே உள்ளது. மும்பை அணி எட்டுக்கு ஐந்தில் மற்றுமே வெற்றி பெற்றிருந்தாலும், அதிரடி காட்டுகிறது. சூர்யகுமார் யாதவ் நிச்சயம் முக்கிய கட்டங்களில் திருப்பம் தருகிறார்.
பந்துவீச்சில் வில் ஜேக்ஸ்  தொடர்ந்து அசத்துகிறார்.  சில போட்டிகளில் மட்டுமே பந்துவீச்சு எடுபடுகிறது. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட், லக்னோ அணிக்காக கடைசி நேரத்தில் அதிரடி காட்டலாம்.
கார்த்திக், பல்லடம்:
விராட் கோலி அனுபவம், பேட்டிங் கை கொடுப்பதால், பெங்களூரு அணி அசத்துகிறது. அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வந்த மும்பை அணி அதிரடி காட்டி வெற்றிகளை பெற்று வருவதால், மூன்றாவது இடத்தை எட்டிபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
முதல் மூன்று இடங்களில் உள்ள மூன்று அணிகளும், 12 புள்ளிகளை பெற்றுள்ளது. எப்போது வேண்டுமானலும் மாற்றம் நிகழலாம். பஞ்சாப், லக்னோ அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இறுதி நேரத்தில் ரன் ரேட் அடிப்படையில் மாற்றம் ஏற்படும்.
ஜெகநாதன், நிழலி, கொடுவாய்:
அணியின் கேப்டனாக தோனி இருப்பதால், சென்னை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது.  பத்தாவது இடத்தில் சென்னை அணி உள்ளது. இனியாவது தற்போதுள்ள அணியின் வீரர்களின், பலம், பலவீனம் தெரிந்து விளையாட வேண்டும்.

