/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளை ஈ தாக்குதல்; விவசாயிகள் கவலை
/
வெள்ளை ஈ தாக்குதல்; விவசாயிகள் கவலை
ADDED : பிப் 15, 2025 07:26 AM
பொங்கலுார்; நடப்பாண்டில் பருவ மழை பெய்ததாலும், பி.ஏ.பி., தண்ணீர் பாசனம் நடப்பதாலும் தென்னை மரங்கள் வறட்சியிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில், தற்பொழுது தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த ஈக்கள் தாக்கிய தென்னை மரங்களின் ஓலைகள் கருப்பு நிறத்திற்கு மாறி வருகின்றன. தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்திருப்பது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'வேளான் துறையினர் கூறும் தடுப்பு முறைகள், ஒட்டுண்ணி விடுவது போன்றவற்றால் முழுமையாக கட்டுப்படுத்தமுடிவதில்லை. அதிக வெப்பம், பலத்த காற்று, அதீத மழை போன்றவற்றால் மட்டுமே இவற்றை முழுமையாக அழிக்க முடியும், என்றனர்.

