/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் தொகுதியில் வேட்பாளர் யார்? வாக்காளர்கள் ஆர்வம்
/
திருப்பூர் தொகுதியில் வேட்பாளர் யார்? வாக்காளர்கள் ஆர்வம்
திருப்பூர் தொகுதியில் வேட்பாளர் யார்? வாக்காளர்கள் ஆர்வம்
திருப்பூர் தொகுதியில் வேட்பாளர் யார்? வாக்காளர்கள் ஆர்வம்
ADDED : மார் 19, 2024 10:55 PM
- நமது நிருபர் -
திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார்; பிரசாரத்துக்கு வர உள்ள தலைவர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு, வாக்காளர்களிடம் அதிகரித்துள்ளது. வேட்பாளர்கள், கட்சிகளின் திறனை 'எடை' போட்டு, வாக்களிக்க ஆயத்தமாகியுள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதி பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இத்தொகுதியில், 2009ல் சிவசாமி (அ.தி.மு.க.,), 2014ல் சத்திய பாமா (அ.தி.மு.க.,), 2019ல் சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர், வெற்றி பெற்றனர்.
இந்த முறை லோக்சபா தேர்தலில், 'அரசியல் கணக்கு' மாறியுள்ளது. தி.மு.க., கூட்டணி, இந்திய கம்யூ.,வுக்கு இத்தொகுதியை ஒதுக்கியுள்ளது.
அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தங்கள் வேட்பாளர்களை களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி, சீதாலட்சுமி என்பவரை ஏற்கனவே வேட்பாளராக களமிறக்கி பிரசாரத்தை துவக்கிவிட்டது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வலம் வருகின்றன.
இருப்பினும் அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, வாக்காளர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடனே அரசியல் கட்சியினரும், கூட்டணியினரும் தேர்தல் பிரசாரத்தை துவக்கியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
திருப்பூர் தொகுதியில், தேர்தல் பிரசாரத்துக்கு எந்த தலைவர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி, 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட முக்கியத் தலைவர்கள், திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

