sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 யாருக்கு 'சீட்' கிடைச்சாலும் 'தீயா' வேலை செய்யணும்! அ.தி.மு.க. நேர்காணலில் 'அட்வைஸ்'

/

 யாருக்கு 'சீட்' கிடைச்சாலும் 'தீயா' வேலை செய்யணும்! அ.தி.மு.க. நேர்காணலில் 'அட்வைஸ்'

 யாருக்கு 'சீட்' கிடைச்சாலும் 'தீயா' வேலை செய்யணும்! அ.தி.மு.க. நேர்காணலில் 'அட்வைஸ்'

 யாருக்கு 'சீட்' கிடைச்சாலும் 'தீயா' வேலை செய்யணும்! அ.தி.மு.க. நேர்காணலில் 'அட்வைஸ்'


ADDED : ஜன 13, 2026 10:30 AM

Google News

ADDED : ஜன 13, 2026 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'யாராவது ஒருத்தருக்குதான் 'சீட்' கிடைக்கும்; யாருக்கு சீட் கிடைத்தாலும்,'தீயா' தேர்தல் வேலையை கவனிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., நேர்காணலில் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் காங்கயம் சட்டசபை தொகுதிகள் உள்ளன. மூன்று தொகுதிகளில், போட்டியிட, 74 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர்.அனைவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

வழக்கமான நேர்காணல் போல இல்லாமல், பொது செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில், சிறிய ஆலோசனை கூட்டம் போல் நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கான நேர்காணல், 9ம் தேதி மாலை நடந்துள்ளது. திருப்பூரில் இருந்து, மாவட்ட நிர்வாகிகள் உட்பட, விருப்பமனு தாக்கல் செய்த நபர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இதுகுறித்து கட்சியினர் கூறியதாவது:

நேர்காணலில், பொதுசெயலாளர் மற்றும் நிர்வாகிகள், மனம் விட்டு பேசினர். சட்டசபை தொகுதியில், விருப்பமனு தாக்கல் செய்தவர்கள், தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும். இத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்களில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதில் இருந்து, அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டுமென அறிவுறுத்தினர்.

அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாராவது ஒருவருக்குத்தான் 'சீட்' கிடைக்கும். யாருக்கு சீட் கிடைத்தாலும், ஒற்றுமையாக தேர்தல் வேலையை, 'தீயாக' கவனிக்க வேண்டும். இது, மிகவும் சவாலான தருணம். அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டுமென, பொதுசெயலாளர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us