/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., புறக்கணித்தது ஏன்? திருப்பூரில் தோழர்கள் கேள்வி
/
தி.மு.க., புறக்கணித்தது ஏன்? திருப்பூரில் தோழர்கள் கேள்வி
தி.மு.க., புறக்கணித்தது ஏன்? திருப்பூரில் தோழர்கள் கேள்வி
தி.மு.க., புறக்கணித்தது ஏன்? திருப்பூரில் தோழர்கள் கேள்வி
ADDED : ஏப் 12, 2024 10:39 PM
திருப்பூரில் நடந்த மா.கம்யூ., பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்காதது ஏன்? என, தோழர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். அவருடன், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் மட்டும், அமைச்சர், எம்.எல்.ஏ., - மேயர் உடன் சென்று பிரசாரம் செய்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு கூட்டணி கட்சியினர் தலைகாட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ம.தி.மு.க., - மா.கம்யூ., - காங்., கட்சியினர், தங்கள் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று முகாமிட்டுள்ளதாகவும், உள்ளூரில் வேட்பாளர் தனித்து களம் காண வேண்டியுள்ளதாகவும், தோழர்கள் புலம்புகின்றனர்.
இச்சூழலில், மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், நேற்று முன்தினம், திருப்பூரில் பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கூட்டம் சேர்க்க உதவி செய்யுமாறு தி.மு.க.,விடம் கேட்டிருக்கின்றனர்.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சுற்றுலா வேன்களில் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
கூட்டம் முடிந்ததும், அதே வேன்களில் அவரவர் வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இவ்வளவு துாரம் ஏற்பாடு செய்த தி.மு.க.,வினர் பெரிய அளவில் பங்கேற்கவில்லை. மேயர் தினேஷ்குமாரும், கூட்டம் துவங்கியதும் பேசிவிட்டு, வேலை இருப்பதாக கூறி புறப்பட்டு சென்றார்.
கூட்டணி கட்சி வேட்பாளருக்கு தி.மு.க.,வினர் களமிறங்கி வேலை பார்த்த நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள் பங்கேற்காதது ஏன் என, 'தோழர்'கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

