/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் டெலிவரி தாமதம் ஏன்? கேட்டவரை அவமதித்த ஊழியர்
/
தபால் டெலிவரி தாமதம் ஏன்? கேட்டவரை அவமதித்த ஊழியர்
தபால் டெலிவரி தாமதம் ஏன்? கேட்டவரை அவமதித்த ஊழியர்
தபால் டெலிவரி தாமதம் ஏன்? கேட்டவரை அவமதித்த ஊழியர்
ADDED : மே 22, 2025 11:53 PM
திருப்பூர் : தன் பெயருக்கு வந்த விரைவு தபாலை திரும்ப அனுப்பியது குறித்து கேட்டவரை, அவமரியாதையாக பேசிய திருப்பூர் தபால் ஊழியரிடம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர், செவந்தாம் பாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து விரைவு தபால் அனுப்பப்பட்டது.
வாகன பதிவு சான்றிதழ் அடங்கிய அந்த தபால் நிலை குறித்து டிராக்கிங் செய்த போது, அது விஜயாபுரம் போஸ்ட் ஆபீசுக்கு வந்து, பின்னர் காட்டன் மார்க்கெட் போஸ்ட் ஆபீசுக்கு திரும்பிச் சென்றது தெரிந்தது.
இதனால், அவர் அங்கு சென்று தனது தபாலைப் பெற்றுக் கொண்டார். முகவரி சரியாக இருந்தும், அதில் மொபைல் போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தும், அதை திரும்ப அனுப்பியது குறித்து சம்பந்தப்பட்டவர், உரிய போஸ்ட் உமனை தொடர்பு கொண்டு பேசினார். மேலும் முறையாக தபாலை டெலிவரி செய்யாதது குறித்து மேல் அதிகாரிக்கு புகார் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அதே மொபைல் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், தன்னை போஸ்ட் ஆபீஸ் ஊழியர் என்றும், தபால் டெலிவரி குறித்து எங்கு, யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்; என்று கூறியதோடு வரம்பு மீறியும் அவமதிக்கும் விதமாகவும் பேசியுள்ளார்.
இந்த உரையாடலை பதிவு செய்து, அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தபால் துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்த, இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டது.