/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோலார் கட்டமைப்பு இல்லாதது ஏன்? விளக்கம் கேட்கிறது நீர்வளத்துறை
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோலார் கட்டமைப்பு இல்லாதது ஏன்? விளக்கம் கேட்கிறது நீர்வளத்துறை
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோலார் கட்டமைப்பு இல்லாதது ஏன்? விளக்கம் கேட்கிறது நீர்வளத்துறை
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோலார் கட்டமைப்பு இல்லாதது ஏன்? விளக்கம் கேட்கிறது நீர்வளத்துறை
ADDED : நவ 15, 2025 10:27 PM
திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், சோலார் கட்டமைப்பு ஏற்படுத்தப்படாதது குறித்து, அத்திக்கடவு - அவிநாசி போராட்டக்குழுவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, அத்திக்கடவு- அவிநாசி சிறப்பு திட்ட அதிகாரிகளிடம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில், பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படுவதில்லை என, திட்டம் சார்ந்த குளம், குட்டைகள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் புகார் கூறி வருகின்றனர். நீரேற்ற நிலையில் உள்ள மோட்டார் பம்ப் வாயிலாக தான் நீர் செறிவூட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மின் வினியோகத்தில் அவ்வப்போது ஏற்படும் தடை மற்றும் மின்கட்டண சுமை ஆகியவை, நீர் வினியோகத்துக்கு அவ்வப்போது முட்டுக்கட்டையாக இருக்கிறது என, திட்டம் சார்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் கூறி வருகின்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வடிவமைக்கப்பட்ட சமயத்திலேயே, மோட்டார் வாயிலாக நீரேற்றம் செய்யும் மின் செலவை ஈடு செய்யும் வகையில், சோலார் கட்டமைப்பு ஏற்படுத்துவது தொடர்பான விவரங்கள் திட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனால், சோலார் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மின் கட்டண சுமை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து விளக்கம் கேட்டு, அரசு முதன்மை செயலருக்கு மனு அனுப்பினோம். அந்த மனு, நீர்வளத்துறை முதன்மை செயலரின் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அத்திக்கடவு - அவிநாசி சிறப்பு திட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

