ADDED : மே 18, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை ; உடுமலையில் இருந்து மைவாடி, செங்கண்டிபுதுார், ஜோத்தம்பட்டி வழியாக கணியூர் செல்லும் ரோட்டில், அதிகளவு கிராமங்கள் உள்ளன. இந்த ரோடு செங்கண்டிபுதுார் முதல் கணியூர் வரை மிக குறுகலாக உள்ளது.
தவறுதலாக அந்த ரோட்டில் கனரக வாகனங்கள் வரும் போது, பிற வாகனங்கள் விலகி செல்ல வழியில்லாமல் போக்குவரத்து பாதிக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.