/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரிவாக்கம் செய்த ரோட்டில் பள்ளம்; வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

ADDED : அக் 09, 2024 12:31 AM

பல்லடம் : விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம்- - வெள்ளகோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில், பள்ளம் உருவாகியுள்ளது. மழை நீரில் ஜல்லிக்கற்கள் கரைந்து சென்றதால், பள்ளம் ஏற்பட்டு, அதில், மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால், இவ்வழியாக வரும் வாகனங்கள், பள்ளத்திலிருந்து விலகி செல்வதால், பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் வெளிச்சமின்மை காரணமாக, பள்ளம் இருப்பது தெரியாமலும், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. புதிதாக போடப்பட்ட ரோடு கரைந்து போனதா அல்லது இப்பகுதியில் ரோடு சரிவர போடப்படவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியில், ரோட்டை சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.