/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லால் தாக்கி மனைவி கொலை; கணவருக்கு வாழ்நாள் சிறை
/
கல்லால் தாக்கி மனைவி கொலை; கணவருக்கு வாழ்நாள் சிறை
கல்லால் தாக்கி மனைவி கொலை; கணவருக்கு வாழ்நாள் சிறை
கல்லால் தாக்கி மனைவி கொலை; கணவருக்கு வாழ்நாள் சிறை
ADDED : ஜூலை 25, 2025 11:28 PM

திருப்பூர்; திருப்பூர், சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன், 49. சுமை துாக்கும் தொழிலாளி. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி மீனாட்சி, 46, அதே மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 2022 ஏப்., 10ம் தேதி, இருவரும் தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகம் முன் பேசிக் கொண்டிருந்தனர். இருவரிடையை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அன்புச்செல்வன், பெரிய கல் ஒன்றை எடுத்து மீனாட்சியின் தலை மீது போட்டு விட்டுச் சென்று விட்டார். படுகாயமடைந்த மீனாட்சி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் அன்புச்செல்வனைக் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில், நீதிபதி கோகிலா முன்னிலையில் நடைபெற்று வந்தது இதில், அன்புச்செல்வனுக்கு வாழ்நாள் முழுவ தும் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட் டது. அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். தீர்ப்புக்குப் பின் அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.