/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுருக்கு கம்பி வலையில் உயிரினங்கள் வேட்டை வனத்துறை 'குறட்டை'
/
சுருக்கு கம்பி வலையில் உயிரினங்கள் வேட்டை வனத்துறை 'குறட்டை'
சுருக்கு கம்பி வலையில் உயிரினங்கள் வேட்டை வனத்துறை 'குறட்டை'
சுருக்கு கம்பி வலையில் உயிரினங்கள் வேட்டை வனத்துறை 'குறட்டை'
ADDED : மே 03, 2025 05:08 AM
பொங்கலுார்; வனங்களில் வசிக்கும் வனவிலங்குகள் சுதந்திரமாக திரிகின்றன. காடு மற்றும் விவசாய நிலம் உள்ளடக்கிய சமவெளிப் பகுதிகளில் மயில், மான், உடும்பு, கீரி, கவுதாரி, காடை, முயல் போன்ற உயிரினங்கள் கணிசமான அளவு வாழ்கின்றன. இவை உயிர்ச்சூழல் மண்டலத்தின் முக்கிய உயிர் நாடி.
இவற்றை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். ஆனால் கிராமப்புறங்களில் இவற்றை அதிக அளவு வேட்டையாடுவதால் அவை அழியும் நிலையில் உள்ளது. காட்டு விலங்குகளை சுருக்கு கம்பி வலைகளை பயன்படுத்தி கொல்வது, கூண்டு வைத்து பிடிப்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிலர், 50 முதல், 100 அடி நீளத்திற்கு தொடர் சுருக்கு கம்பி வலைகளை பயன்படுத்தி காட்டு உயிரினங்களை வேட்டையாடுகின்றனர். இவ்வாறு வேட்டையாடுவதன் மூலம் காடுகளில் வாழும் காட்டு உயிரினங்கள் தப்பிக்கவே முடியாது. சுருக்கு கம்பிகளில் சிக்கி உயிரிழந்த காட்டு உயிரினங்களை சமைத்து உண்கின்றனர்.
பொங்கலுார் உப்பு கரை நதி கரைகளில் பத்துக்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வந்தன. அவை தற்போது மாயமாகிவிட்டன. எங்கு பார்த்தாலும் தென்படும் முயல், கீரி, உடும்பு போன்றவை பெருமளவு கொல்லப்பட்டு விட்டன.
கொடூரமான முறையில் காட்டு உயிரினங்களை வேட்டையாடும் வேட்டைக்காரர்கள் மீது, வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.