/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வன விலங்கு வார விழா போட்டிகள் மாணவர்களே, தயார்தானே
/
வன விலங்கு வார விழா போட்டிகள் மாணவர்களே, தயார்தானே
வன விலங்கு வார விழா போட்டிகள் மாணவர்களே, தயார்தானே
வன விலங்கு வார விழா போட்டிகள் மாணவர்களே, தயார்தானே
ADDED : அக் 04, 2024 12:22 AM
திருப்பூர்: தமிழக வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், வன உயிரின வாரத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஓவியப் போட்டி
எல்.கே.ஜி., முதல், 1ம் வகுப்பு வரை 'வன உயிரினங்கள்'; 2 முதல், 5ம் வகுப்பு வரை, 'காடுகளின் வன உயிரினங்கள்'; 6 முதல், 8ம் வகுப்பு வரை, 'வனங்கள் மற்றும் வன உயிரினங்களை பாதிக்கும் காரணிகள்'; 9 முதல், 12ம் வகுப்பு வரை, 'காடுகளின் பெருக்கத்தில் பறவைகள் மற்றும் வன உயிரினங்களின் பங்கு'; கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஈர நிலங்களில் பறவைகள்' ஆகிய தலைப்புகளில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.
பேச்சு போட்டி
6 முதல், 8ம் வகுப்பு வரை, 'ஈர நிலங்களின் முக்கியத்துவம் அதனை பாதுகாப்பதன் அவசியம்'; 9 முதல், 12ம் வகுப்பு வரை, 'வன உயிரினங்கள் பாதுகாப்பில் மனித பங்களிப்பின் முக்கியத்துவம்'; கல்லுாரி மாணவர்களுக்கு 'வன மற்றும் வன உயிரினங்களால் நாம் அடையும் பயன், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பின் முக்கியத்துவம்' ஆகிய தலைப்புகளில் போட்டி நடக்கிறது.
கட்டுரை போட்டி6 முதல், 8ம் வகுப்பு வரை, 'வனம், வன உயிரின பாதுகாப்பில் நம் பங்கு'; 9 முதல், 12ம் வகுப்பு வரை, நெகிழி பயன்பாடால் வனங்கள் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு'; கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஈர நிலங்களை பாதுகாப்பதன் அவசியம்' ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது.