/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்கும் நீர்க்கசிவு புதிய பாலம் கட்டப்படுமா?
/
அதிகரிக்கும் நீர்க்கசிவு புதிய பாலம் கட்டப்படுமா?
அதிகரிக்கும் நீர்க்கசிவு புதிய பாலம் கட்டப்படுமா?
அதிகரிக்கும் நீர்க்கசிவு புதிய பாலம் கட்டப்படுமா?
ADDED : மார் 28, 2025 03:18 AM

பொங்கலுார்: பொங்கலுார் வழியாக செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலில் ராமம்பாளையம் அருகே பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட அந்த பாலத்தில், தரைமட்டத்திலிருந்து தண்ணீர் கீழே சென்று பின் தண்ணீர் மேலே செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தரைமட்டத்தில் ரோடு செல்கிறது.
ஏராளமான குப்பைகள் அந்தப் பாலத்தில் தான் மிதந்து கொண்டுள்ளன. பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும் நீரின் அழுத்தம் காரணமாகவும் பாலத்தில் விரிசல் விழுந்துள்ளது. இதனால், தண்ணீர் ஆங்காங்கே கசிகிறது. அந்தப் பாலம் பலவீனமடைந்துள்ளது. அது உடைந்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கும். நீர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் கடை மடைக்குச் செல்வதும் குறையும். எனவே, அங்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.