sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா! நம்பினார்; பறிகொடுத்தார்

/

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா! நம்பினார்; பறிகொடுத்தார்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா! நம்பினார்; பறிகொடுத்தார்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா! நம்பினார்; பறிகொடுத்தார்


ADDED : ஜூன் 24, 2025 12:30 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பொள்ளாச்சி, சமத்துாரை சேர்ந்த திருமூர்த்தி மகன் மணிகண்டன், 35. கட்டட தொழிலாளி. கடந்த ஜன., மாதம், தனியார் நிதி நிறுவனம் வாயிலாக கடன் பெற்று, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் வாங்கினார். தவணையை சரிவர திருப்பி செலுத்த முடியாத நிலையில், மற்றொரு நபரிடம் காரை அடமானம் வைத்து பணம் பெற்றார். அந்நபர், வேறொருவரிடம் காரை விற்று விட்டு, தன்னை ஏமாற்றி விட்டதாக, மணிகண்டன் பல்லடம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மணிகண்டன் கூறியதாவது:

எனக்கு சரிவர வேலை கிடைக்காமல் வருவாய் குறைந்ததால், காருக்கான தவணையை செலுத்த இயலவில்லை. இதனால், எனது பெயரில் உள்ள காரை விற்க முடிவு செய்தேன். நண்பர்கள் வாயிலாக, ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த நபரிடம், ஒப்பந்த அடிப்படையில் காரை விற்றேன்.

அதன்பின், 3 மாதம் ஆகியும் தவணையை செலுத்தவில்லை. இது குறித்து கேட்டதற்கு, காரை வேறு இடத்தில் அடமானம் வைத்ததாகவும், அவர்களை காரையும், அதற்கான பணத்தையும் தராமல் மாயமாகி விட்டனர் என்றும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறினார். இதற்கிடையே, நான், கடன் பெற்றிருந்த நிதி நிறுவனத்தினர் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

நான் வசிக்கும் பகுதியில் உள்ள கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து, ஒரு வாரமாக, வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குமாக அலைந்து வருகிறேன். வருமானமும் இல்லாமல், காரையும், பணத்தையும் இழந்ததுடன், நிதி நிறுவனத்தினர் ஒரு பக்கம் நெருக்கடி தர, போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்தும் தீர்வு கிடைக்கவில்லை. காரை வாங்கி ஏமாற்றிய நபர் ஹாயாக சுற்றி வருகிறார். பணத்தையும், காரையும் இழந்த நான், வருமானத்தையும் இழந்து, செய்வதறியாமல் தவித்து வருகிறேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

'இன்று விசாரிக்கிறோம்'

பல்லடம் எஸ்.,ஐ சிவலிங்கத்திடம் கேட்டதற்கு, ''இது பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் என்பதால், அங்கு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், மணிகண்டன் இங்கு அளித்த புகாரின் பேரில் அவரிடம் கார் வாங்கிய நபரிடம், இன்று விசாரிக்கிறோம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us