/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்று வழியில் இயக்கமா? மினி பஸ்கள் கண்காணிப்பு
/
மாற்று வழியில் இயக்கமா? மினி பஸ்கள் கண்காணிப்பு
ADDED : ஜூன் 28, 2025 12:12 AM

திருப்பூர்; புதிய வழித்தட உரிமம் பெற்ற மினி பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்காமல் மாற்று வழியில் பயணிக்கின்றனவா என்பது குறித்து ஆராய போக்கு வரத்து அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள் வழித்தடத்தில் மினிபஸ்கள் விதிமீறி பயணிப்பதால், அரசு பஸ்களில்கலெக் ஷன் குறைகிறது.
மெயின் ரோட்டில் மினி பஸ்கள் குறிப்பிட்ட துாரம் மட்டுமே பயணிக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டாலும், அதனை அலட்சியப்படுத்தி மினி பஸ் டிரைவர்கள் கலெக் ஷன் எடுக்கின்றனர். இத்தகைய பஸ்களை கண்காணிக்க, உதவி மேலாளர் (இயக்கம்) தலைமையில் கண்காணிப்பாளர், டிக்கெட் பரிசோதகர் அடங்கிய குழு ஒவ்வொரு கிளையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கிளை - 1 குழுவினர் நேற்று தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப், சங்கிலி பள்ளம் ஓடை ஸ்டாப்கள் வழியாக மினிபஸ்கள் பயணிக்கிறதா, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தை விட்டு வேறு வழித்தடத்தில் செல்கிறார்களா என ஆய்வுசெய்தனர்.
நேற்றைய ஆய்வில் எந்த மினிபஸ்சும் பிடிபடவில்லை.