sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நம்பர் 1 திருப்பூர் மீண்டும் சாதிக்குமா?: பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்

/

நம்பர் 1 திருப்பூர் மீண்டும் சாதிக்குமா?: பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்

நம்பர் 1 திருப்பூர் மீண்டும் சாதிக்குமா?: பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்

நம்பர் 1 திருப்பூர் மீண்டும் சாதிக்குமா?: பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்


UPDATED : மார் 02, 2026 07:09 AM

ADDED : மார் 02, 2026 04:33 AM

Google News

UPDATED : மார் 02, 2026 07:09 AM ADDED : மார் 02, 2026 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. முதலிடத்தை மீண்டும் கைப்பற்றி, ஐந்து முறை முதலிடம் பெற்ற மாவட்டம் என்ற சாதனையை திருப்பூர் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது; மாவட்டம் முழுதும், 90 மையங்களில், 11 ஆயிரத்து, 930 மாணவர், 14 ஆயிரத்து 478 மாணவியர் என மொத்தம், 26 ஆயிரத்து, 408 பேர் தேர்வெழுதுகின்றனர்.

முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், துறை அலுவலர், வழித்தட அலுவலர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், நிலையான பறக்கும் படையினர், பறக்கும் படையினர் என, 2,120 பேர் பொதுத்தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்தேர்வில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து அனைத்து அலுவலர்களுக்கும் ஆலோசனை கூட்டம் நடத்தி முழுமையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்த்தேர்வும், வரும், 5ம் தேதி ஆங்கிலத்தேர்வும் நடக்கிறது; வரும், 9ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது; 26ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது.

மாணவியரே அதிகம் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, 2025ல், 11 ஆயிரத்து, 735 மாணவர்கள், 13 ஆயிரத்து, 862 மாணவியர் என, 25 ஆயிரத்து 597 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதினர். கடந்த ஆண்டை விட கூடுதலாக, 195 மாணவர், 616 மாணவியர் என மொத்தம், 811 பேர் சேர்த்து, இந்த முறை 26 ஆயிரத்து, 408 பேர் தேர்வெழுத உள்ளனர். நடப்பு ஆண்டிலும் மாணவரை விட, மாணவியரே அதிகளவில் பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.

பிளஸ் 2 தேர்ச்சியில், கடந்த, 2023ல் மாநிலத்தில், 2வது இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம், 2024ல், 97.45 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றது; 2025ல் முதலிடத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஏனெனில், 2019, 2020ல் தொடர்ந்து முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், 2025 ல் 97.53 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் மூன்றாமிடம்தான் பெற முடிந்தது.

நடப்பாண்டு மீண்டும் முதலிடம் பெற்று திருப்பூர் கல்வி மாவட்டம் சாதனை படைக்கும் என்ற கனவுடன் கல்வி அலுவலர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us