/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூரியரில் வந்த 250 கிலோ குட்கா
/
கூரியரில் வந்த 250 கிலோ குட்கா
ADDED : மார் 01, 2026 06:50 AM
திருப்பூர்: திருப்பூரில் கூரியர் சர்வீஸ் மூலம் குட்கா பாக்கெட்டுகள் டெலிவரி எடுத்த கும்பலை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவிலிருந்து கூரியர் பார்சல் மூலம் திருப்பூருக்கு குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. எம்.எஸ். நகரில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்துக்கு வந்த பார்சல்களைப் பெற சிலர் வந்தனர்.
போலீசார் அவர்கள் ெபற்ற பார்சல்களை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அவற்றில் குட்கா பாக்கெட்கள் இருந்தன. இதையடுத்து, விக்னேஷ், 38; மணிகண்டன், 43; சேகர், 43; மணிகண்டன், 45; யுவராஜ், 27 மற்றும் அருண், 35 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களுக்கு பார்சலில் வந்த மொத்தம் 250 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

