/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எண்ணெய் வித்து, பயறு சாகுபடி முக்கியத்துவம் தரப்படுமா?
/
எண்ணெய் வித்து, பயறு சாகுபடி முக்கியத்துவம் தரப்படுமா?
எண்ணெய் வித்து, பயறு சாகுபடி முக்கியத்துவம் தரப்படுமா?
எண்ணெய் வித்து, பயறு சாகுபடி முக்கியத்துவம் தரப்படுமா?
ADDED : ஜூன் 01, 2025 07:14 AM
பொங்கலுார் : கார்த்திகை மற்றும் மாசி பட்டங்களில் ஏராளமான விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டனர்.
சந்தையில் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி விளைச்சல் அபரிமிதமாக உயர்ந்தது. தேவையை விட உற்பத்தி அதிகரித்ததால் சந்தையில் விலை குறைந்தது.
பல காய்கறிகள் கிலோ பத்து, 20 ரூபாய்க்கு விலை போனது. இதனால் உற்பத்திச் செலவை கூட ஈடுகட்ட முடியாமல் பல விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.
கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் எண்ணெய் வித்து, பயறு வகைகள் சாகுபடியை குறைத்து விட்டனர்.
மொத்தமாக காய்கறி சாகுபடிக்கு மாறியது, உயர் விளைச்சல் ரகங்களால் விளைச்சல் அதிகரிப்பு, சொட்டு நீர் பாசன முறையால் சாகுபடி பரப்பு அதிகரிப்பு போன்றவற்றால் விளைச்சல் அதிகரித்து விலை சரிந்துள்ளது.
காய்கறியை தவிர்த்து மாற்று பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து தப்ப முடியும். பசுமைப் புரட்சியில் நெல்லுக்கும், கோதுமைக்கும் கொடுத்தது போல தற்போது பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களுக்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.