/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் காய்கறி தோட்டம்; தோட்டகலைத்துறை கவனிக்குமா?
/
பள்ளிகளில் காய்கறி தோட்டம்; தோட்டகலைத்துறை கவனிக்குமா?
பள்ளிகளில் காய்கறி தோட்டம்; தோட்டகலைத்துறை கவனிக்குமா?
பள்ளிகளில் காய்கறி தோட்டம்; தோட்டகலைத்துறை கவனிக்குமா?
ADDED : ஆக 08, 2025 08:21 PM
உடுமலை; பள்ளிகளில் உள்ள காய்கறித்தோட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு, தோட்டக்கலை துறையின் பங்களிப்பும் அவசியமாகியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இயற்கையின் இன்றியமையாமையை அறிந்து கொள்வதற்கும், பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த அமைப்புகளில் உள்ள மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில், இயற்கையான முறையில் காய்கறிகளை வளர்ப்பது, தோட்டம் அமைப்பது மற்றும் மூலிகை தோட்டம் போடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
சில பள்ளிகளில், தொடர்ந்து இத்தோட்டங்களை பராமரிக்கின்றனர். பல பள்ளிகளில் இதற்கான இடவசதி இல்லாதது மற்றும் தண்ணீர் வசதி குறைபாடு போன்ற நடைமுறை சிக்கல்களால். தோட்டம் அமைப்பதற்கான வாய்ப்பில்லாமல் போகிறது.
இவ்வாறுள்ள பள்ளிகளில், குறுகிய இடத்தில் செடிகள் வளர்ப்பது, சிறிய இடத்திலும் மூலிகை செடிகள் வளர்ப்பது குறித்து, விழிப்புணர்வு தேவையாக உள்ளது.
தோட்டக்கலைத்துறையினர், பள்ளிகளில் அதற்கான ஆலோசனை வழங்குவதற்கும், உள்ளாட்சி நிர்வாகத்தினர் இடவசதி ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.