/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?
/
விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?
விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?
விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?
ADDED : ஜூன் 09, 2025 11:54 PM

''கவுன்சிலராக முடிவு பண்ணிட்டேங்க்கா''
''மித்து... ஓட்டுப்போட நான் ரெடி...
திருமுருகன்பூண்டி நகராட்சி துணைத்தலைவி உள்பட பெண் கவுன்சிலருங்க நாலு பேருக்கு, கமிஷனர் எழுதுன எச்சரிக்கைக் கடிதத்தைப் பத்தி உனக்குத் தெரிஞ்சிருச்சா''
''ஆமாக்கா... மா.கம்யூ., கட்சிக்காரங்க கலெக்டர்ட்ட பூண்டி நகராட்சில நாலு பெண் கவுன்சிலருங்களோட கணவர்கள் தலையீடு, நகராட்சி நிர்வாகத்துல அதிகமா இருக்கறதா புகார் கொடுத்திருக்காங்க... உடனே, நகராட்சி கமிஷனரும் 'ரீயாக்ட்' பண்ணீட்டாரு... 'கணவர்கள் தலையீடு இருந்தா நடவடிக்கை எடுப்பேன்'னு கவுன்சிலருங்களுக்கு கடிதம் மூலமா கமிஷனர் எச்சரிச்சிருக்காரு''
''மித்து... உடனே அதிகாரியைக் கூப்பிட்டு பெண் கவுன்சிலருங்க கேட்ருக்காங்க... 'மக்கள் பிரச்னைன்னு சொன்னவுடனே அந்த இடத்துக்கு நாங்க போக முடியுமா? வீட்ல வேலை இருக்கும். கணவர்கள் தான் உடனடியா போய், பிரச்னையைத் தீர்த்துவைப்பாங்க... எல்லா ஊர்லயும் இப்படித்தானே நடக்குது... இங்க மட்டும் என்ன புதுசான்னு கேட்ருக்காங்க...
''அதிகாரியோ, 'இதைப்போய் பெரிசா எடுத்துட்டீங்களாக்கும்... புகார் வந்துச்சு. 'ரீயாக்ட்' பண்ணியாச்சு... புகார் கொடுத்தவங்க 'பிரஷர்' கொடுத்தா, வேற என்ன செய்யச்சொல்றீங்க... நீங்க எப்பவும் போலவே இருங்க... உங்க மேல நடவடிக்கை எடுக்க முடியுமா'ன்னு சிரிச்சிட்டே பதில் சொன்னாராம்''
''அத்தனையும் நடிப்புத்தானாக்கா...'' முகபாவத்தை மாற்றினாள் மித்ரா.
''சித்ராக்கா... திருப்பூர் மாநகராட்சில குப்பை பிரச்னைதான் இப்போ 'ைஹலைட்'. குப்பை கொட்டவே இடமில்லாதப்ப, குப்பையை எப்படித் தரம் பிரிச்சு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடியும்ன்னு, மாநகராட்சிக் கூட்டத்துல மேயர் பேசினார்ல்ல... அதுவே பிரச்னையாயிடுச்சு... திடக்கழிவு மேலாண்மை திட்டத்துல தான், துாய்மைப்பணியை தனியாருக்கு கொடுத்திருக்காங்க. இதுக்கு மாநகராட்சி சார்பில வருஷத்துக்கு பல கோடி நிதியும் ஒதுக்கிடறாங்க...
''வீடு, கடை, ஓட்டல்கள்ல இருந்து தினசரி அள்ற குப்பை, கழிவுகளை, பாறைக்குழியில் கொண்டு போய் கொட்றதுக்கு, எதுக்காக தனியாருக்கு விடணும்'' ன்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.
''ஆமால்ல...'' வியப்பு காட்டினாள் சித்ரா.
வசூல் வில்லங்கம்
''மித்து... மாயவனார் அதிகாரியா இருக்கிற 'காளை' ஊர் சப் டிவிஷன்ல, 'லோகத்தை ஆள்ற நாதன்'கற ஏட்டுதான் சட்டவிரோத ஆசாமிங்ககிட்ட பணம் கறக்கற வேலையைப் பார்க்குறாராம்.
''இத்தனைக்கும் இந்த ஏட்டு, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நடவடிக்கை எடுக்கப்பட்டவராம். ஏட்டு 'அதிகாரம்' பண்றத பொறுக்க முடியாம, போலீஸ்காரங்ககூட குமுறுறாங்களாம். மாசம் பல லகரங்கள், ஸ்டேஷன்ல புழங்குதாம். புகார்கள் நிறையப்போனதாலஎஸ்.பி.,யோட பார்வை, இந்த சப் டிவிஷன் மேல தீவிரமாயிருச்சாம்''
'தைரிய' பார்கள்
''அக்கா... மாவட்டத்துல டாஸ்மாக் மதுக்கடை 200க்கும் மேல இருக்கு. இதில 30 முதல் 50 கடைகள்ல பார்கள், ஒப்பந்தத்தொகை கூட செலுத்தலையாம். இப்ப டெண்டர் தேதி அறிவிச்சாச்சு. ஆனாலும் சட்டவிரோதமா தொடர்ந்து பார்கள் செயல்பட்டுட்டுதான் வருது. புகார்கள் போனா நடவடிக்கை எடுக்கிற மாதிரி 'சீல்' வைக்கிற மாதிரி 'பாவ்லா' காட்றாங்க. உடனே, 'சீல்' உடைச்சு பாரை திறந்துடறாங்க'' என்றாள் சித்ரா.
பணம் பாதாளம் வரைக்கும் பாயறதால, அரசுக்கு ஏற்படுற வருவாய் இழப்பை அதிகாரிகள் கண்டுக்கறதில்லையாம்''மித்ரா ஆசுவாசப்பட்டாள்.
''மித்து... அவிநாசி, மங்கலம் ரோட்டுல இருக்கிற ராயர்ஆகாச' கோவில் கும்பாபிேஷக திருப்பணி, காம்பவுண்ட் சுவர் கட்டுற விவகாரத்துல, ஒரு தரப்பினர் கோர்ட்டுக்குப் போனதால நின்னுருச்சு. அறநிலையத்துறை சார்பில் திருப்பணியைத் துவக்க எந்த நடவடிக்கையையும் காணோம்.பக்தர்கள் செயல் அலுவலரிடம் கேட்டா, கோர்ட்டில் வழக்கு நடக்குதுன்னு ஒரே வரில பதிலை கூறி சமாளிச்சுடறாராம்''
தேர்தல் ஜூரம்
''சித்ராக்கா... சட்டசபை தேர்தல்ல அவிநாசி தொகுதியை கூட்டணிக்கட்சிக்கு விட்டுக்கொடுக்காம, இந்தத் தடவை தி.மு.க.,வே போட்டியிடும்ன்னு சொல்றாங்க. ஆனா, அவிநாசி தொகுதி மேல பா.ஜ., கண் வைக்குது. அ.தி.மு.க.,வுக்கோ இந்த தொகுதியை விட்டுத்தர மனசு இல்ல. திருப்பூர் மேயர், இந்த முறை வடக்கு அல்லது தெற்கு தொகுதில நிக்கணும்ங்கற முடிவில இருக்காராம். இதுக்காக மேலிடத்துல பேசிட்டிருக்கிறதாவும் பேச்சு அடிபடுது''
''வடக்குத்தொகுதி அ.தி.மு.க., கோட்டைன்னு கருதப்படுறதால, தெற்குத்தொகுதிதான் 'சேப்டி'ன்னு நினைக்கிறாராம். அதேசமயம், தெற்கு தொகுதில, மகனுக்கு சீட் வாங்கணும்கற முனைப்புல, தற்போதைய எம்.எல்.ஏ., இருக்கிறாராம்''
ஜல்ஜீவன் என்னாச்சு?
''மித்து... கலெக்டர் ஆபீஸ்ல மத்திய அரசு விவசா யிகளுக்கு வழங்கும் திட்டங்கள் தொடர்பா, பிரதமர்மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சரோட படங்களுடன் இருந்த பேனரை, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்துட்டிருக்கப்பவே அகற்றியிருக்காங்க... பா.ஜ., காரங்க முற்றுகைப்போராட்டம் நடத்தியும் 'நோ ஏக்ஷன்'. ஜல் ஜீவன்ங்கிற மத்திய அரசின் திட்டத்தையே மாவட்ட நிர்வாகம் மறந்திருச்சு... மறைச்சுடுச்சு... பா.ஜ., காரங்க இதையும் மாவட்ட நிர்வாகத்துக்கு நினைவு படுத்தணும்'' என்றாள் சித்ரா.
'பசை' வித்தை
''சித்ராக்கா... மாநகராட்சில எங்கு பார்த்தாலும் குழாய் உடைஞ்சு குடிநீர் ரோட்ல ஆறா பாயுது. இதுக்கு குடிநீர் குழாய்ப்பணியை ஒப்பந்தம் செய்திருக்கிற நிறுவனத்தின் மெத்தன போக்குதான் முக்கியக் காரணம்ங்கறாங்க. ஒரு வார்டுல, ரெண்டு அடி விட்டமுள்ள இரும்புக்குழாய்கள் இணையுற இடத்தில வெல்டிங் வைக்கறதுக்காக சில நாட்கள் குழி தோண்டி கிடப்பில் போட்டிருக்காங்க. வார்டு கவுன்சிலர், கமிஷனரைச் சந்திச்சு இதுதொடர்பா பேசுனவுடனே ஒப்பந்த நிறுவனத்தினருங்க போன்ல கவுன்சிலரை அழைச்சிருக்காங்க. 'குழாயை இணைச்சாச்சு; குழியை மூடப்போறோம்'ன்னு சொல்லியிருக்காங்க. அங்க போனதுக்கப்புறம்தான் தெரியுது. ரெண்டு அடி விட்ட இரும்புக்குழாயை, ரெண்டு பாக்கெட் 'எம்.சீல்' பசையை வைத்து இணைச்சிருக்காங்க. இப்படிப் பசையைக் கொண்டு ஒட்டுனா, குழாய் உடைப்பும், குடிநீர் ஊற்றும் ஏற்படாம என்ன செய்யும்?''அங்கலாய்த்தாள் சித்ரா.
வசூல் கறார்
''சித்ராக்கா... மாவட்ட வருவாய்த்துறைல அஞ்சு தாலுகாக்களுக்கு தலைவரா இருக்கிற ஒரு அதிகாரி, வசூல்ல கறாராம். புரோக்கர்களைப் பயன்படுத்தாம, தானே நேரடியா கேட்டுடறாராம். வெளிப்படையா இப்படி கேட்டா லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல ஒருநாள் மாட்டிக்குவீங்கன்னு சொன்னா, லட்சக்கணக்குல காசு கொடுத்துதான் இங்க வந்திருக்கேன்னு ஜம்பமா பேசுறாராம். மாட்டுறப்பதான் புத்தி வரும்ன்னு சக அதிகாரிகளே அவரைத் திட்டித் தள்றாங்க...'' ரகசியம் உடைத்தாள் மித்ரா.
'டுபாக்கூர்' சாகசம்
''மித்து... கலெக்டர் ஆபீஸ்ல குறைதீர்ப்பு நாளன்னிக்கு தீக்குளிப்பு நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறுது. இதுக்குப் பின்னணில 'டுபாக்கூர் நிருபர்கள்' இருக்காங்களாம். கெடுபிடி இல்லாத கோர்ட் ரோடு வழியா உள்ளே வந்து, கூட்ட அரங்கின் மேற்புற போர்டிகோவுக்கு வந்திடுங்கன்னு ஐடியா கொடுக்குறாங்களாம். இப்படி வந்துதான் தீக்குளிப்பு நாடகங்கள் அரங்கேற்றப்படுதாம். இந்த வாரம், ஒரு டூவீலர்ல பிரஸ்ன்னு போட்டு இருந்துச்சு. அதில அரை லிட்டர் பெட்ரோல் வாட்டர் கேன்ல வைக்கப்பட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடிச்சு எடுத்திருக்காங்கன்னா பார்த்துக்கோயேன்''... அங்கலாய்த்தாள் சித்ரா.
''சித்ராக்கா... வடக்கு தாலுகா மிகப்பெரிய வருவாய்க்கிராமமா தொட்டியபாளையம் இருக்கு. ஒரு லட்சம் பேர் வசிக்கிறாங்க. இதோட வி.ஏ.ஓ., ஆபீஸ், ஜெய்வாபாய் பள்ளி பக்கம் இருக்கு. இங்கு கிராம உதவியாளரா இருக்கிறவரு, ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல பணிபுரிஞ்சுக்கிட்டு இருக்காரு. இதனால, வி.ஏ.ஓ., ஆபீஸ்ல செய்ய வேண்டிய பணிகளை அவரால கவனிக்க முடியறதில்லை. பொதுமக்களுக்கும் இதனால சங்கடம்'' என மித்ரா தொடர்ந்தாள்.
''ஊத்துக்குளி தாலுகாவுல சில வருவாய் கிராமங்கள்ல எதுக்கு எடுத்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வாங்க முடியும்கறதுதான் நிலை. 'இடையர்' கிராமத்துல நில அளவீடு செய்வதற்காக விண்ணப்பித்த விவசாயியிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டாராம் வி.ஏ.ஓ., கோபமடைஞ்ச விவசாயி, லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல புகார் கொடுத்துட்டாரு. ஆனா, விவரம் எப்படித் தெரிஞ்சுதுன்னு தெரியல, வி.ஏ.ஓ., 10 நாள் தொடர் விடுப்புல போயிட்டாராம். இருந்தாலும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்து கண்காணிச்சுட்டுத்தான் இருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.
கலெக்ஷன் ஜரூர்
''சித்ராக்கா... பல்லடம் 'பதிவு' அலுவலகத்துல, பெண் அதிகாரி, கணவர் மூலம்தான் தினமும் பணத்தை கலெக்ட் பண்ணுவாராம். இப்ப வாராவாரம் கலெக்ட் பண்ற மாதிரி ஒருத்தர நியமிச்சிட்டாராம்''
''மித்து... பல்லடத்துல தி.மு.க., வார்டு பொறுப்பாளரா இருக்கிற 'ரத்தினமான' அந்த 'சாமி', கடைல ஆறாயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கீட்டு போனவருதான். ரெண்டு வருஷமாயும் பணத்தைக் கொடுக்கலே... செருப்பு தேய்ஞ்சுபோய் வேற செருப்பையே மாத்தீட்டாராம். கடைக்காரங்க தான் பாவம்''
''சித்ராக்கா... பெருமாநல்லுார்ல கொண்டத்துக்காளியம்மன் கோவிலை புனரமைக்க அரசு அனுமதி அளிச்சாச்சு... இதுக்காக கூட்டம் நடத்தின ஆளுங்கட்சி 'வி.ஐ.பி.,'ங்க அறநிலையத்துறை அமைச்சரை சந்திக்க தேதி வாங்கிடறோம். புனரமைக்க கூடுதல் நிதி வாங்கித்தர்றோம்ன்னு போனவங்க போனவங்கதான். ஒரு மாசத்துக்கு மேலாகியும் எட்டிப்பார்க்கல. ஆளும்கட்சிக்காரங்களை பகைச்சுக்க முடியாது. புனரமைக்க அனுமதி அளிச்சதே லேட்டுத்தான். இப்ப என்ன பண்றது... அவங்க சொல்றவரைக்கும் காத்திருப்போம்னு நிதி வழங்க தயாரா இருக்கிறவங்க வேதனைப்படறாங்களாம்''''சரி... மித்து... நீ வேதனைப்படாத''
சுடச்சுட தோசை சுட ஆரம்பித்தாள் சித்ரா. நாக்கு சப்புக்கொட்ட சட்னி, சாம்பாருடன் 'ரவுண்ட்' கட்டத் தயாரானாள் மித்ரா.