/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை மலை ஒழியுமா? பொதுமக்கள் ஆதங்கம்
/
குப்பை மலை ஒழியுமா? பொதுமக்கள் ஆதங்கம்
ADDED : டிச 16, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கொடுவாயில் குப்பைகளை கொட்ட போதுமான இட வசதி கிடையாது.
எல்லபாளையம் புதுார் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது. ஊராட்சி சார்பில் குப்பை கொட்டுவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குப்பை கொட்டுவது நின்றபாடில்லை. குடியிருப்பு வாசிகள் கூறுகையில், ''வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் மலை போல் குவிக்கப்படுகிறது. நாங்கள் எப்படி நிம்மதியாக வாழ்வது?'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

