/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
496 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா; நில நிர்வாக ஆணையர் பரிந்துரைப்பாரா?
/
496 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா; நில நிர்வாக ஆணையர் பரிந்துரைப்பாரா?
496 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா; நில நிர்வாக ஆணையர் பரிந்துரைப்பாரா?
496 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா; நில நிர்வாக ஆணையர் பரிந்துரைப்பாரா?
ADDED : பிப் 03, 2026 06:40 AM
திருப்பூர்: திருப்பூர், பூலாவாரி சுகுமாறன் நகரில் ஓடையை ஒட்டியுள்ள மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதி, 45வது வார்டு பூலாவாரி சுகுமாறன் நகரில், 12.78 ஏக்கர் பரப்பில் நொய்யல் ஆற்றையொட்டி, புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது.
இப்பகுதியை ஒட்டி, கடந்த, 30 ஆண்டுகளாக, 496 குடும்பங்கள் குடியிருப்பு அமைத்து வசித்து வருகின்றனர்; அவர்களது வீட்டுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
'இந்நிலத்தை வகை மாற்றம் செய்து, பட்டா வழங்க வேண்டும்' என, கலெக்டர் வாயிலாக முன்மொழிவு செய்யப்பட்டது. முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் மனுக்கள் வழங்கப்பட்டன.
கடந்த, 3 ஆண்டுக்கு முன் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் பெயரில், நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., செல்வராஜ், நில நிர்வாக ஆணையரிடம் வழங்கிய மனு:
இந்த இடத்துக்கும், நொய்யல் ஆறுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால், நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் பெயரில் அரசாணை பெற்று, அவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, மாவட்ட வருவாய், மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் கூட்டுப்புலத்தணிக்கை மேற்கொண்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு வழங்கலாம் என்ற அறிக்கை, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வாரியத்தின் பெயரில் அரசாணை பெற வேண்டி, நில நிர்வாக ஆணையரிடம் குறிப்பாணை அறிக்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளதாக, அரசு கூடுதல் தலைமை செயலாளர், கடிதம் வாயிலாக தகவல் அளித்துள்ளார். எனவே, விரைந்து பரிந்துரை செய்து, பட்டா கிடைக்க உதவ வேண்டும்.

