/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாறுமா?
/
வக்கீல் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாறுமா?
ADDED : ஆக 03, 2025 10:02 PM
திருப்பூர்; தாராபுரத்தில், ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று கோரி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 41; ஐகோர்ட் வக்கீல். கடந்த 28ம் தேதி, தாராபுரத்தில், இவர் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவரது சித்தப்பா தண்டபாணி உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முருகானந்தத்தின் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்து விட்டனர். கடந்த, ஆறு நாட்களாக பேச்சு நடத்தியும், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், கொலை வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, முருகானந்தம் தாய் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.