தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தபால் அலுவலகம் பராமரிக்கப்படுமா?

தபால் அலுவலகம் பராமரிக்கப்படுமா?

தபால் அலுவலகம் பராமரிக்கப்படுமா?


UPDATED : நவ 21, 2026 08:54 PM

ADDED : நவ 21, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 08:54 PM ADDED : நவ 21, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் அக்ரஹார வீதியில் செயல்பட்டு வரும் துணை தபால் அலுவலக கட்டடத்தை பராமரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட இந்த தபால் அலுவலகம் மூலம், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழில் துறையினர், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தபால் அனுப்புதல், சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி மற்றும் மணி ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. மேலும், தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று பதிவுத் தபால் பெறும் நேரம் அதிகரிக்கப்பட்டதுடன், ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 10க்கும் மேற்பட்ட கிளை தபால் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாத கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அலுவலக பயன்பாட்டுக்கு போதிய இடவசதி இல்லாத நிலையும் உள்ளது. மேலும், தபால் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றி சாலையிலேயே நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.

தபால் அலுவலகத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி கடந்த ஆண்டு பா.ஜ., சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு முக்கிய சேவைகளை வழங்கி வரும் பல்லடம் துணை தபால் அலுவலக கட்டடத்தை முறையாக பராமரித்து, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us