/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொது மருத்துவ முகாம் மீண்டும் நடத்தப்படுமா?
/
பொது மருத்துவ முகாம் மீண்டும் நடத்தப்படுமா?
ADDED : நவ 22, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தொடர் மழைக்காலத்தின் போது நடத்தப்பட்டு வந்த பொது மருத்துவ முகாம் நிறுத்தப்பட்ட பின், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை நாடி தினசரி வருவோரின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது. இதனால், இயற்கை உபாதைகளுக்கு எழுந்து செல்ல கூட இடைவெளி இல்லாமல் பணிபுரிய வேண்டிய நிர்பந்தம், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இச்சிரமங்களை தவிர்க்க, மீண்டும் பொது மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பனிக்காலம் துவங்கி உள்ள தால், பொது மருத்துவ நடத்த பொது சுகாதாரத்துறை முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.