/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரக ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறுமா? விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு
/
ரக ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறுமா? விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு
ரக ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறுமா? விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு
ரக ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறுமா? விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 03, 2024 11:33 PM
பல்லடம்:''கடந்த பத்து ஆண்டுக்கு மேலாக நிறைவேறாமல் உள்ள ரக ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற வேண்டும்'' என, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
விசைத்தறி தொழில் மேம்பட, கைத்தறிகளைப் போன்றே விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்பது, இரண்டு மாவட்ட விசைத்தறியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. கடந்த, பத்து ஆண்டுக்கு மேலாகவே விசைத்தறியாளர்கள் இக்கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரக ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளையும் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான பட்டியலை தயாரித்து, அவற்றை ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களிடம் வழங்கி, தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''கைத்தறிக்கு ரகங்கள் ஒதுக்கியது போல், விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு செய்தால் தொழில் பாதுகாக்கப்படும். அரசு துறைகளில் சீருடைகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கும், விசைத்தறி துணி உற்பத்தி மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
சாதாரண விசைத்தறிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற செய்ய, பட்டியல் தயாரித்து அரசியல் கட்சிகளிடமும் வழங்கி வருகிறோம்,'' என்றார்.

