ADDED : மே 06, 2025 06:29 AM

திருப்பூர்; திருமுருகன்பூண்டி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர் பாஷா கூறியதாவது:
அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் இருபுற புறவழிச்சாலையும் பராமரிப்பின்றி, சிதிலமடைந்துள்ளது என, கலெக்டரிடம் முறையிட்டிருந்தோம். விளைவாக, செங்கப்பள்ளி முதல் நீலாம்பூர் வரை, இருபுறமுள்ள புறவழிச்சாலை செப்பனிடப்பட்டு, வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது.
இது, பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. அதே நேரம், திருப்பூர் புறவழிச்சாலையில், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துாய்மைப்பணி என்பது, சுத்தமாக இல்லை. புறவழிச்சாலையோரங்களில், குப்பை, மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது.சாலையோரங்களில் தான் ஓட்டல், மருத்துவ மனைகள் உள்ளிட்டவை உள்ளன.
குப்பையால் எழும் துர்நாற்றம், பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இவ்விவகாரத்தில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
