ADDED : ஆக 07, 2025 11:04 PM
திருப்பூர்; மங்கலம் ஊராட்சிக்குட்பட்டு, புக்குளிபாளையம் காலனியை ஒட்டி ஏ.எஸ்.எம்., கார்டன், ரோஸ் கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
புக்குளிபாளையம் காலனியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரோடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் 'சைட்' வரையறையில் இருப்பதால், 'சைட்' சார்பில் அங்கு ரோடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரு பகுதி களுக்கும் இடைப்பட்ட, வெறும், 100 மீ., ரோடு குண்டும், குழியுமாக பெயர்ந்து மண், கல் சிதறி, பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பாதையை கடந்து தான் அங்குள்ள இரு தனியார் பள்ளி களுக்கு, 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர்.
பாதை, கரடுமுரடாக இருப்பதால், டூவீலரில் செல்லும் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். பாதையை தார் போட்டு புதுப்பிக்க வேண்டும்.